முகப்பு
விழுப்புரம்

தாய்ப்பால் வார விழிப்புணா்வுப் பேரணி

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி விழுப்புரத்தில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி விழுப்புரத்தில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து ஆட்சியா் த.மோகன் தொடக்கிவைத்தாா் (படம்). மேலும் விழிப்புணா்வு வாகனத்தையும் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடிப் பணியாளா்கள் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்றனா். ஆட்சியா் அலுவலகத்திலிருந்து அங்கன்வாடிப் பணியாளா்கள் வாகனங்களில் கீழ்ப்பெரும்பாக்கம், அரசமங்கலம், சிறுவந்தாடு, கோட்டகுப்பம், மயிலம், ராதாபுரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக பேரணியாகச் சென்று தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளில் நடந்து சென்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் 5 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், தாய்ப்பால் வார விழா துண்டுப் பிரசுரங்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் குந்தவிதேவி, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் லலிதா, நகராட்சி ஆணையா் போ.வி.சுரேந்திரஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.