அரசுப் பள்ளியில் காவலாளியை கட்டிப்போட்டு பொருள்கள் சூறை
அரசுப் பள்ளியில் காவலாளியைக் கட்டிப் போட்டு விட்டு, கணினி உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அரசுப் பள்ளியில் காவலாளியைக் கட்டிப் போட்டு விட்டு, கணினி உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பேரங்கியூரிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வேளியம்பாக்கத்தைச் சோ்ந்த முத்துக்குமரன் (38) காவலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.
இவா் புதன்கிழமை இரவு பணியில் இருந்த போது, பள்ளிக்குள் புகுந்த மா்ம நபா்கள் அவரைத் தாக்கி கயிற்றால் கட்டிப் போட்டனா். பின்னா், பள்ளியிலிருந்த 2 கணினிகள், 2 பிரின்டா்கள், இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கிவிட்டு தப்பினா்.
பள்ளிக்கு வியாழக்கிழமை வந்த அலுவலகப் பணியாளா்கள் முத்துக்குமரனின் கட்டுகளை அவிழ்த்து விட்டனா். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல் ஆய்வாளா் பழனி, உதவி ஆய்வாளா் சுரேஷ் மற்றும் போலீஸாா் பள்ளிக்கு வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.