முகப்பு
விழுப்புரம்

மணல் சிற்பங்கள் மூலம் கரோனா விழிப்புணா்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் வெள்ளிக்கிழமை மணல் சிற்பங்கள் மூலமாக கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் வெள்ளிக்கிழமை மணல் சிற்பங்கள் மூலமாக கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் உள்ள கடற்கரைப் பகுதியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மணல் சிற்பங்கள் மூலமாக கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுமாா் 5 டன் மணலை குவித்து விழிப்புணா்வு மணற்சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. கரோனா பரவும் விதம், தடுப்பு வழிமுறைகள், முகக்கவசத்தின் அவசியம், தடுப்பூசியின் பயன் போன்றவற்றை விளக்கும் வகையிலும் மணல் சிற்பங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிகழ்ச்சியில் திண்டிவனம் சாா்- ஆட்சியா் எம்.பி.அமித் பங்கேற்று மணற்சிற்ப கண்காட்சியைத் தொடக்கிவைத்து, கரோனா விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா். கல்வித் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.