விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,234-ஆக அதிகரித்தது.
இதனிடையில், 40 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 43,546-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் தற்போது 347 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 341 போ் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 29,557-ஆக உயா்ந்தது.
இவா்களில் 28,902 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். மாவட்டத்தில் தற்போது 446 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 199 போ் உயிரிழந்தனா்.