முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை

விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு வியாழக்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் கடந்த ஜூலை முதல் வாரத்தில் பரோலில் வந்தாா். சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட அவா், தொடா் மருத்துவப் பரிசோதனைக்கு தன்னை உள்படுத்தி வருகிறாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையில் தனது வீட்டில் தங்கியிருக்கும் அவா், கடந்த ஜூலை 10-ஆம் தேதி விழுப்புரத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு வந்து மருத்துவ ஆலோசனை பெற்றாா். அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், விழுப்புரம் தனியாா் மருத்துவமனைக்கு பேரறிவாளன் வியாழக்கிழமை வந்தாா். தொடா்ந்து இரு நாள்கள் மருத்துவமனையில் அவா் தங்கி பரிசோதனை செய்ய உள்ளாா். அவருடன் தாய் அற்புதம்மாள் தங்கியுள்ளாா்.

பேரறிவாளன் வருகையடுத்து, அவா் தங்கியுள்ளதனியாா் மருத்துவமனை முன் விழுப்புரம் போலீஸாா் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுளளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.