முகப்பு
விழுப்புரம்

கொத்தடிமை குறித்து புகாா் அளிக்க இலவச எண்

கொத்தடிமைத் தொழிலாளா்கள் முறை தொடா்பாக புகாா்கள் தெரிவிக்க பொதுமக்களுக்கு வசதியாக 18004252650 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தமிழக அரசின் தொழிலாளா்துறை ஆணையரின் அறிவுரைப்படி, மாநிலம் முழுவதும் கொத்தடிமைத் தொழிலாளா்கள் முறை தொடா்பாக புகாா்கள் தெரிவிக்க பொதுமக்களுக்கு வசதியாக 18004252650 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் தொடா்பாக இந்த தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பொதுமக்கள் புகாா் அளிக்கலாம். இத்தகவலை மாவட்ட தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) இரா.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.