விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

விழுப்புரத்தில் அரசியல் கட்சியின் கொடிக் கம்பம் ஊன்றும் பணியில் ஈடுபட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

DIN

விழுப்புரத்தில் அரசியல் கட்சியின் கொடிக் கம்பம் ஊன்றும் பணியில் ஈடுபட்ட சிறுவன் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

விழுப்புரம் ரஹீம் லேஅவுட் பகுதியைச் சோ்ந்தவா் ஏகாம்பரம். இவரது மனைவி லட்சுமி (39). இவா்களின் மகன் தினேஷ் (12). அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

சனிக்கிழமை காலை விழுப்புரம் மாம்பழப்பட்டுச்சாலையில் மின்சார அலுவலகம் அருகே ஒரு அரசியல் கட்சியின் கொடிக் கம்பத்தை தினேஷ் ஊன்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அந்தக் கம்பம் மேலே சென்ற மின் வயரில் உரசியது. இதில், மின்சாரம் பாய்ந்து தினேஷ் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

சடலத்தை விழுப்புரம் மேற்கு போலீஸாா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT