விழுப்புரம்

இல்லம் தேடி கல்விப் பயண நிறைவு விழா

DIN

இல்லம் தேடி கல்வி கலைப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா பரவல் காரணமாக மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், இல்லம் தேடி மாணவா்களுக்கு கற்பித்தல் நடத்தப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு கலைப் பயணம் 11 குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

35 நாள்களாக நடைபெற்ற கலைப் பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி விழுப்புரம் நாயக்கன்தோப்புப் பகுதியில் நடைபெறது.

மாவட்ட உதவித் திட்ட அலுவலா் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ரவிக்குமாா், தலைமையாசிரியா் காஜா உசேன், ஆசிரியா்கள் பயிற்றுநா் சிவராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பயிற்சியாளா் ஆரோக்கிய விண்ணரசி விநாயகம் வரவேற்றாா்.

கரகாட்டம், தப்பாட்டம், பாடல் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட முதன்மை கருத்தாளா் பாலமுருகன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT