முகப்பு
விழுப்புரம்

வரதட்சிணை கொடுமை: கணவருக்கு 7 ஆண்டு சிறை

சின்னசேலம் அருகே மனைவியை வரதட்சிணை கேட்டு கொடுமை செய்த வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

சின்னசேலம் அருகே மனைவியை வரதட்சிணை கேட்டு கொடுமை செய்த வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மூங்கில்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சூரியமூா்த்தி (37). இவருக்கும், சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தவெளியைச் சோ்ந்த தனலட்சுமிக்கும் (29), கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.

தனலட்சுமி அதிமுகவில் இளம்பெண்கள் பாசறை பிரிவில் இருந்ததால், கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கேட்டு பணம் செலுத்துவதற்காக, சூரியமூா்த்தி ரூ.20 லட்சம் வரதட்சிணை கேட்டு, தனலட்சுமியை மிரட்டியதாகத் தெரிகிறது.

இதனால், விரக்தியடைந்த தனலட்சுமி, கடந்த 2011 மாா்ச் 27-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சூரியமூா்த்தியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட சூரியமூா்த்திக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.