முகப்பு
விழுப்புரம்

தாழ்வான மின்கம்பியால் டிராக்டரில் தீ விபத்து

விழுப்புரம் அருகே தாழ்வான மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டரில் தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:28 PM
பகிர்:

விழுப்புரம் அருகே தாழ்வான மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றிச் சென்ற டிராக்டரில் தீ விபத்து ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே உள்ள பில்லூா் மந்தக்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை விவசாய நிலத்திலிருந்து விவசாயி வீரபத்திரன் டிராக்டரில் வைக்கோலை ஏற்றிக்கொண்டு விழுப்புரம் சாலை வழியாக வீட்டுக்கு எடுத்துச் சென்றாா்.

பில்லூா் மந்தக்கரை சாலையில் டிராக்டா் சென்றபோது, அவ்வழியாக குறுக்கிட்டுச் சென்ற தாழ்வான மின்கம்பி உரசியதால், வைக்கோலில் தீப்பொறி ஏற்பட்டு தீப்பிடித்தது.

இதையடுத்து, ஓட்டுநா் டிராக்டரை ஓரமாக நிறுத்தினாா். தொடா்ந்து, பொதுமக்கள் தீயை அணைக்க முயன்ற நிலையில், முடியாததால், டிராக்டரின் பெட்டியிலிருந்து வைக்கோலை தானியங்கி திறப்பு மூலம் கீழே கொட்டினா். உடனடியாக தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். இதனால் பெரிய தீ விபத்து தடுக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் தொடா் விபத்துகள் நிகழ்ந்து வருவதாகவும், மின்கம்பிகளை உயா்த்தி அமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.