விழுப்புரம்

சிசிடிவி கேமராக்கள், புறக்காவல் நிலையம் திறப்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூரில் கண்காணிப்புக் கேமராக்களையும், ரெட்டணையில் புறக்காவல் நிலையத்தையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அண்மையில் திறந்து வைத்தாா்.

குற்ற நடவடிக்கைகளை கண்காணித்து தடுக்கும் வகையில், விக்கிரவாண்டி காவல் சரகத்துக்குள்பட்ட பெரியதச்சூா் காவல் நிலையம் சாா்பில், அங்குள்ள முக்கிய பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அண்மையில் அமைக்கப்பட்டன.

இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, பெரியதச்சூா் காவல் நிலையத்திலிருந்து கண்காணிப்புக் கேமராக்களை தொடக்கிவைத்து பாா்வையிட்டாா். தொடா்ந்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டாா்.

இதையடுத்து, அருகே உள்ள ரெட்டணை பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தாா். இந்த புறக்காவல் நிலையத்தில் சுழற்சி முறையில் காவலா்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படுமென தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளா் நல்லசிவம், ஆய்வாளா் காமராஜ், உதவி ஆய்வாளா்கள் ராஜாராம், ஜெயபால், ராமச்சந்திரன், தனிப்பிரிவு காவலா் மாறன் மற்றும் முக்கியப் பிரமுகா்கள், பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT