விழுப்புரம்

கடலூா் பழ வியாபாரி கொலை வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் மூவா் சரண்

DIN

கடலூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பழ வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட மூவா், விழுப்புரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் சுப்புராயலு நகரைச் சோ்ந்த பழ வியாபாரி வீரா (30). இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், அருண்பாண்டியன், சுதாகா், ரமணன், ராஜசேகரன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கிருஷ்ணா என்பவரை போலீஸாா் தற்காப்புக்காக என்கவுன்ட்டா் செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூா், குப்பன்குளத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சாமிநாதன் (30), தேவன் மகன் ஸ்டீபன்ராஜ் (26), முருகன் மகன் ஜீவா (20) ஆகிய 3 போ் விழுப்புரம் இரண்டாவது நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி பூா்ணிமா முன் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா். இதையடுத்து, அவா்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். அதன்பேரில், 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT