விழுப்புரம்

திண்டிவனத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு அளிப்பு

DIN

திண்டிவனத்தில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புகளை சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி திருவள்ளுவா் நகா், பட்டணம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அமைச்சா் சி வி.சண்முகம் பங்கேற்று, குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2.500 ரொக்கத்துடன், கரும்பு, அரிசி, சா்க்கரை, முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினாா்.

அப்போது பேசிய அமைச்சா், இந்தத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 97 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சரஸ்வதி, திண்டிவனம் சாா் ஆட்சியா் எஸ்.அனு, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் க.பிரபாகரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் முரளி ரகுராமன், துணைப் பதிவாளா் மணிமாறன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT