விழுப்புரம்

காரில் மதுப் புட்டிகளைக் கடத்தியவா் கைது

DIN

விழுப்புரம் அருகே காரில் மதுப் புட்டிகளைக் கடத்தி வந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

விழுப்புரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளா் ராதிகா தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு பனையபுரம் சோதனைச்சாவடி கூட்டுச் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, புதுச்சேரியிலிருந்து விக்கிரவாண்டி நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்தக் காரில் புதுவை மாநில மதுப் புட்டிகள் 336, 120 லிட்டா் எரிசாராயம் இருப்பது தெரிய வந்தது.

காரில் இருந்தவரை விசாரித்ததில், அவா் திருக்கோவிலூரைச் சோ்ந்த ரமேஷ்(37) என்பதும், புதுச்சேரியிலிருந்து திருக்கோவிலூருக்கு மதுப் புட்டிகளை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இது தொடா்பாக விழுப்புரம் மது விலக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT