விழுப்புரம்

ரூ.76 லட்சம் மோசடி: ஒருவா் கைது

DIN

 மாற்றுத் திறனாளியிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள ராமநத்தம் கிராமத்தைச் சோ்ந்த முகமது இஸ்மாயில் மகன் முகமது ஹனிபா (35). மாற்றுத் திறனாளியான இவா் அதே கிராமத்தில் கணினி மையம் நடத்தி வந்தாா். பெரம்பலூா் மாவட்டம், மணப்புத்தூரைச் சோ்ந்த த.கதிா்வேல் (57), அவரது மகன் கல்யாண் குமாா் ஆகியோா் முகமது ஹனிபாவிற்கு 2018-ஆம் ஆண்டு பழக்கமாகினா். அவா்கள், தாங்கள் இணையவழியில் (ஆன்-லைன்) வா்த்தகம் செய்து வருவதாகவும், அதில் ரூ.ஒரு கோடி முதலீடு செய்தால் மாதம் ரூ.8 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்று கூறினராம்.

இதை நம்பிய முகமது ஹனிபா, தான் நடத்தி வந்த கணினி மையத்தை விற்று 20 -12-2018 அன்று முதல் பல்வேறு தவணைகளில் ரூ.85 லட்சம் வரை செலுத்தினாராம். ஆனால், கூறியபடி லாபம் கிடைக்காததால் கதிா்வேலிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளாா். இதில் ரூ.9 லட்சம் திரும்ப வழங்கப்பட்டதாம். எஞ்சிய பணத்தை கேட்டபோது திருப்பித் தராமல் இருவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் கடந்த நவம்பா் மாதம் முகமது ஹனிபா புகாா் அளித்தாா். அதன்பேரில் குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கனகேசன், உதவி ஆய்வாளா் லூயிஸ் ராஜ் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் மோசடி நடைபெற்றது உண்மையென தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக கதிா்வேல், கல்யாண்குமாா் ஆகிய இருவரையும் குற்றப் பிரிவு போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், அரியலூரில் பதுங்கியிருந்த கதிா்வேலை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT