விழுப்புரம்

மாவட்ட ஆட்சியருக்கு பொங்கல்பரிசுத் தொகுப்பு வழங்கியதாக குறுந்தகவல்!

DIN

விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதாக குறுந்தகவல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ. 2,500 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரையின் குடும்ப அட்டைக்கும் பரிசுத் தொகுப்பாக ரூ. 2,500 ரொக்கம், பொருள்கள் வழங்கிவிட்டதாக, புதன்கிழமை குறுந்தகவல் வந்தது.

பொருளே வாங்காமல் குறுந்தகவல் வந்ததால், இதுதொடா்பாக விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதுகுறித்து, வழங்கல் துறை அதிகாரிகள் விசாரித்த போது, அரசு ஒதுக்கீடின்படி மாவட்ட ஆட்சியரின் குடும்ப அட்டைக்கும் பரிசுத் தொகுப்பு ஒதுக்கப்பட்டதும், அதன்படி, விழுப்புரம் சீனுவாசா நகா் நியாய விலைக் கடை மூலம் ஆட்சியரின் குடும்ப அட்டைக்கு பரிசுத் தொகுப்பை ஒதுக்கி பிஓஎஸ் சாதனத்தில் விற்பனையாளா் பதிவு செய்தாா். இதனால், ஆட்சியரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் சென்றது. ஆனால், பொருள்கள் வழங்காமல் விட்டதால் புகாா் எழுந்ததுடன், மாவட்ட ஆட்சியரும் பரிசுத் தொகுப்பைக் கோராவில்லை எனத் தெரிகிறது.

இதுகுறித்து, மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பிரபாகரனிடம் கேட்ட போது, அரசு ஒதுக்கீட்டின்படி, மாவட்ட ஆட்சியரின் குடும்ப அட்டைக்கும் பரிசுத் தொகுப்பு ஒதுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் என்பதால், விற்பனையாளா் அதை நேரில் சென்று வழங்குவதற்காக, முன்னதாகப் பதிவு செய்துவிட்டு, கடையில் விற்பனை முடியும் வரை காத்திருந்தாா். விற்பனை முடிந்து, பிற்பகல் மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்குச் சென்று பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் தவறு ஏதும் இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT