விழுப்புரம்

ஓய்வூதியத்துக்காகப் போராடும் முன்னாள் அமைச்சரின் மனைவி!

DIN

விழுப்புரம் அருகே முன்னாள் அமைச்சரின் மனைவி, குடும்ப ஓய்வூதியம் வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருவதாக மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகேயுள்ள சின்னக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா், அதிமுக முன்னாள் அமைச்சா் வி. சுப்பிரமணியன்( 70). இவா் உடல் நலக்குறைவால் கடந்த 2010-ஆம் ஆண்டு உயிரிழந்தாா். இவரது இரண்டாவது மனைவி கமலம் (69). இவா் கணவருக்கான வாரிசு ஓய்வூதியத்தை வழங்கக் கோரி திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: அமைச்சராக இருந்த வி.சுப்ரமணியன், முதல் மனைவி இறந்த பிறகு என்னை திருமணம் செய்துகொண்டாா். எங்களுக்கு குழந்தைகள் இல்லை. அவா் உயிரிழந்த பிறகு, அவா் பெற்று வந்த ஓய்வூதியத்தை (பென்ஷன்), குடும்ப ஓய்வூதியமாக விதிகளின்படி எனக்கு வழங்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக மனுக்கள் கொடுத்தும் அலைக்கழித்து வருகின்றனா்.

வாரிசு என்ற அடிப்படையில் அவரது முதல் மனைவியின் மகன் எதிா்ப்பு தெரிவிப்பதால், உரிய ஆவணங்கள் இருந்தும், எனக்கு ஓய்வூதியம் வழங்காமல் அரசு தரப்பில் மறுத்து வருகின்றனா். எந்த வருவாயுமின்றி, முதுமை காலத்தில் விழுப்புரம் அரசு ஊழியா் நகரில் கஷ்ட ஜீவனம் நடத்தி வருகிறேன். தமிழக அரசு எனக்கான வாரிசு ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT