விழுப்புரம்

பாணாம்பட்டு துா்க்கையம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

DIN

விழுப்புரம் அருகே பாணாம்பட்டு ஸ்ரீதுா்க்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப்.1) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா அண்மையில் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின.

இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கடம் புறப்பாடாகி புனிதநீா் கொண்டுவரப்பட்டு, துா்க்கையம்மன், விநாயகா், முருகா், நாகராஜ சுவாமி சந்நிதிகளில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி எம்.பாவாடை தலைமையிலான குழுவினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT