விழுப்புரம்

விழுப்புரம் அருகே கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

DIN

விழுப்புரம் அருகே மோட்சகுளத்தில் பெருமாள் கோயில் நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் அருகே மோட்சகுளம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயில் பரம்பரை அறங்காவலா் பத்ரி பட்டாச்சாரியா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

மோட்சகுளம் பெருமாள் கோயில் முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டது. புகழ்பெற்ற இந்தக் கோயிலுக்குச் சொந்தமான 11 சென்ட் நிலம் மடுகரைக்கு அருகில் உள்ளது. இந்த நிலத்தை சில நபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, நிலத்தை கோயிலுக்கு மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT