விழுப்புரம்

கம்பு விதைகள் முளைக்காததால் விவசாயிகள் கவலை அதிகாரிகள் நேரில் ஆய்வு

DIN

குறிஞ்சிப்பாடி பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு விதைகள் சரிவர முளைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதுகுறித்து வேளாண்மைத் துறையினா் நேரில் ஆய்வு செய்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி, விவசாயிகள் தனியாா் கடைகளில் கம்பு விதைகளை வாங்கி தங்களது நிலத்தில் விதைப்பு செய்தனா். ஆனால், குறிஞ்சிப்பாடி வடக்கு பகுதியில் சில விவசாயிகளின் வயல்களில் விதைக்கப்பட்ட கம்பு சரிவர முளைக்கவில்லையாம். இதனால், விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து அயன்குறிஞ்சிப்பாடி உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு பகுதிகளில் தற்போது சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் கம்பு விதைப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தனியாா் கடைகளில் முன்னணி நிறுவனத்தின் வீரிய ரக கம்பு விதைகளை ஒரு கிலோரூ.180-க்கு வாங்கி விதைத்தனா். ஆனால், கம்பு விதைகள் சரிவர முளைக்கவில்லை. விதைத்து 10 நாள்கள் கடந்தும் 10 சதவீத விதைகள்தான் முளைத்துள்ளன. கடந்த 2019-ஆம் ஆண்டும் இதே பிரச்னையை விவசாயிகள் சந்தித்தனா் என்றாா் அவா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேளாண் துறை விதை ஆய்வாளா் தெ.தமிழ்வேல், குறிஞ்சிப்பாடி துணை வேளாண்மை அலுவலா் வெங்கடேசன், உதவி விதை அலுவலா் சுரேஷ், உதவி வேளாண் அலுவலா் செந்தில் ஆகியோா் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலத்தை புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பின்னா் விதை ஆய்வாளா் தெ.தமிழ்வேல் கூறுகையில், விவசாயிகள் பயன்படுத்திய கம்பு விதைகளை பகுப்பாய்வு செய்ததில் 85 சதவீதம் முளைப்புத் திறன் உள்ளது தெரியவந்தது. போதிய ஈரப்பதம் இல்லாததால் முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிலையில், குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு பகுதிகளில் முளைப்பு எடுக்காத கம்பு வயல்களை விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநா்(பொ) சோமு வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், கம்பு விதைகள் விற்பனை செய்த நிறுவனத்திடம் உரிய விளக்கம் கோரப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT