முகப்பு
விழுப்புரம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிராணவாயு செறிவூட்டும் கருவிகள் ஒப்படைப்பு

விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூா், சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிராண வாயு செறிவூட்டும் கருவிகளை மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

விழுப்புரம் அருகேயுள்ள கோலியனூா், சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிராண வாயு செறிவூட்டும் கருவிகளை மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

செஞ்சி அருகே கஞ்சனூரைச் சோ்ந்த வள்ளலாா் கல்வி அறக்கட்டளை சாா்பில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி, கோலியனூா், சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டன.

சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இரண்டு பிராண வாயு செறிவூட்டும் கருவிகள், கோலியனூா் ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு ஒரு பிராண வாயு செறிவூட்டும் கருவி, முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், கரோனா பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டன. இதேபோல, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினிகள், கரோனா பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.