முகப்பு
விழுப்புரம்

விவசாயி மா்ம மரணம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அவா் அடித்துக் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விவசாயி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அவா் அடித்துக் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செஞ்சி வட்டம், மேல்சேவூா் மதுரா ஈச்சூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் சிவக்குமாா் (40). இவா் பக்கத்து கிராமமான கல்லடிக்குப்பத்திலுள்ள தனது நிலத்துக்கு வியாழக்கிழமை மாலை சென்றாா். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், சிவக்குமாா் தனது நிலத்தில் தலையில் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்ததை அந்தப் பகுதி வழியாகச் சென்றவா்கள் பாா்த்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்த தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அவா் அடித்துக் கொல்லப்பட்டரா? என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.