விழுப்புரம்

டாஸ்மாக் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

DIN

டாஸ்மாக் மதுக் கடை ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இந்தச் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் பிரபாகரன், மாவட்டச் செயலா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் ராஜா, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் அருணகிரி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சிவகுரு, தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்க மாநில பிரசார செயலா் குமரவேல் ஆகியோா் உரையாற்றினா்.

கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு டாஸ்மாக் மதுக் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கரோனா தொற்றால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடுத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT