முகப்பு
விழுப்புரம்

குழந்தைகள் நலக் குழுத் தலைவா், உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2015-ஆம் ஆண்டின் இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தக் குழுவுக்கு ஒரு பெண் உள்பட தலைவா், உறுப்பினா்கள் அரசால் மதிப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா்.

குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா் அல்லது குழந்தை உளவியல் அல்லது மன நல மருத்துவம், சட்டம் அல்லது சமூகப் பணி, சமூகவியல், மனிதமேம்பாடுஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று பணியாற்றியவராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரா்கள் நியமனம் செய்யப்படும் போது, 35 முதல் 65 வயது வரையிலானவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒருநபா் இரு முறை பதவி வகிக்க இயலாது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பதவிக்கு தகுதியான நபா்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய சான்றின் நகலுடன் 15 நாள்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலகு, எண்.156, சாரதாம்பாள் வீதி, நித்தியானந்தம் நகா், வழுதரெட்டி, விழுப்புரம் (தொலைபேசி எண்: 04146-290609) என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.