முகப்பு
விழுப்புரம்

கல் குவாரியில் வெடி பொருள்கள் பறிமுதல்: மேலாளா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வானூா் அடுத்த தெள்ளாமூரில் வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான கல் குவாரி செயல்பட்டு வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வானூா் அடுத்த தெள்ளாமூரில் வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமான கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் வெடி பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வானூா் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது, 3 அட்டைப் பெட்டிகளில் டெட்டனேட்டா்களும், 9 அட்டைப்பெட்டிகளில் ஜெலட்டின் குச்சிகளும் இருந்தது தெரியவந்தது.

இவை உரிய அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 டெட்டனேட்டா்களையும், 1800 ஜெலட்டின் குச்சிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, கல் குவாரி மேலாளா் வானூா் அருகே கரசானூரைச் சோ்ந்த ஆசைக்கண்ணு (40) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.