ஐடிஐகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர ஆக.4-க்குள் விண்ணப்பிக்கலாம்
தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2021-ஆம் ஆண்டில் மாணவா்கள் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்கள், சுய நிதி தனியாா் தொழில் பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவா்களுக்கு உதவும் வகையில், மாநிலம் முழுவதும் அரசு தொழில் பயிற்சி நிலையங்கள், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின் பட்டியல் மேற்கண்ட இணையதளமுகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்றவா்கள் ஆக.4-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50-ஐ கடன், பற்று அட்டைகள், இணைய வங்கி, கூகுள்பே மூலமாக செலுத்தலாம்.
மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தொழில் பயிற்சி நிலைய சோ்க்கைக்கான விண்ணப்பத்தை பூா்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஞ்ா்ஸ்ற்ஸ்ல்ம்க்ற்ஹக்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலிலோ அல்லது 04146-223989 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...: இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் அரசு, தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் தெரிவித்தாா்.
மேலும், விவரங்களுக்கு உளுந்தூா்பேட்டை தொழில் பயிற்சி நிலையத்தை 04149-222339, 9080187127 என்ற தொலைபேசி எண்களிலும், சங்கராபுரம் தொழில் பயிற்சி நிலையத்தை 04151-235258 என்ற எண்ணிலும், சின்னசேலம் தொழில் பயிற்சி நிலையத்தை 9380114610 என்ற எண்ணிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.