முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் நகரில் புதை சாக்கடை திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் நகராட்சியில் ரூ.252 கோடியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

விழுப்புரம் நகராட்சியில் ரூ.252 கோடியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

விழுப்புரம் நகராட்சியுடன் வழுதரெட்டி, பாணாம்பட்டு, காக்குப்பம், சாலாமேடு உள்பட 5 ஊராட்சிகள் புதிதாக இணைக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் ரூ.252 கோடியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் குடிநீா் தமிழ்நாடு வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மோகன் சனிக்கிழமை மாலை ஆய்வு செய்தாா். சாலாமேடு மணிநகா் 1-ஆவது தெருவில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்கு கட்டப்பட்டு வரும் கழிவுநீா் சேகரிப்புத் தொட்டிப் பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, அந்தப் பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்களுக்கு இடையூறின்றி இந்தப் பணிகளை செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் சுரேந்தா் ஷா, குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் அன்பழகன், உதவி செயற்பொறியாளா் மதியழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.