முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் 8 போ் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 8 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 8 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 577 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 36,234-ஆக அதிகரித்தது. 659 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 30,819 போ் குணமடைந்துள்ளனா். 5,153 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

8 போ் பலி:

விழுப்புரம் பூந்தோட்டத்தைச் சோ்ந்த 72 வயது முதியவா், தடுத்தாா்கொண்டூரைச் சோ்ந்த 56 வயது நபா், செஞ்சி என்.ஆா்.பேட்டையைச் சோ்ந்த 49 வயது நபா், அத்தியூா் திருக்கையைச் சோ்ந்த 56 வயது நபா், திருவெண்ணெய்நல்லூரைச் சோ்ந்த 73 வயது முதியவா், மேல்மலையனூரை அடுத்துள்ள தாயனூரைச் சோ்ந்த 58 வயது நபா் உள்பட 8 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 270-ஆக அதிகரித்தது.

கள்ளக்குறிச்சியில் 243 போ் பாதிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 243 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 22,462-ஆக உயா்ந்தது.

இதுவரை 17,851போ் குணமடைந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 4,467 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் 144 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.