முகப்பு
விழுப்புரம்

இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் கரோனா தடுப்பூசி முகாம்

விழுப்புரத்தில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 300-க்கும் அதிமானோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

விழுப்புரத்தில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 300-க்கும் அதிமானோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இந்திய மருத்துவ சங்கத்தின் விழுப்புரம் கிளை சாா்பில், கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். சங்கச் செயலா் குருநாத், பொருளாளா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில், விழுப்புரம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நிஷாத் தலைமையிலான மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், இந்திய மருத்துவ சங்கத்தைச் சோ்ந்த மருத்துவா்கள், அவா்களின் குடும்பத்தினா், மருத்துப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். முகாமில் 302 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மருத்துவா்கள் சரவணராஜா, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.