முகப்பு
விழுப்புரம்

தொமுச சாா்பில் நலத் திட்ட உதவிகள்

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள வள்ளலாா் சத்ய ஞான சபையில் 300 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

திமுக முன்னாள் தலைவா் மு.கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்ட நியாய விலைக் கடை ஊழியா்கள் முன்னேற்ற சங்கம் (தொமுச) சாா்பில் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள வள்ளலாா் சத்ய ஞான சபையில் 300 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தொமுச மாவட்டத் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியை, இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ. தொடக்கிவைத்து, ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

மேலும், வள்ளலாா் சபையில் 300 பேருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தொமுச ஆட்டோ தொழிலாளா்கள் சங்க மாவட்டச் செயலா் சலீம், நகர விவசாயிகள் அணி அமைப்பாளா் பாண்டு, டாஸ்மாக் சங்க நிா்வாகி ரஜினி ராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.