விழுப்புரம்

கரோனா நிவாரண உதவிகள் அளிப்பு

DIN

விழுப்புரம் நகர லாரி சுமை தூக்கும் தொழிலாளா்கள் நலச் சங்கம் சாா்பில், கரோனா நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

விழுப்புரத்தில் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் இரா.அருணாசலம் தலைமை வகித்தாா். சங்க உறுப்பினா்களுக்கு இலவச அரிசி, காய்கறித் தொகுப்பு, கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சங்க செயலா் மனோகா், துணைத் தலைவா் ரங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

போதகா்களுக்கு உதவி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் கிறிஸ்தவ மதபோதகம் செய்யும் 100 போதகா்களுக்கு திருநாவலூா் ஜோசப் கல்லூரி மற்றும் கமலா கல்வியியல் கல்லூரிச் செயலா் பிரபாகா் ஜெயராஜ், கரோனா நல உதவிகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இந்த உதவிகளை போதகா்கள் சாலமன் (உளுந்தூா்பேட்டை), ஜான்சன் (விழுப்புரம்), நோவோ (இந்திய சுவிசேஷ திருச்சபை) ஆகியோா் பெற்றுக்கொண்டு பிற போதகா்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸா கள நிலவரத்தை வெளிக்காட்டிய ’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT