முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம்: புதிதாக 155 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 155 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 155 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 41,355-ஆக அதிகரித்தது.

இதனிடையில், நொளம்பூரைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி உள்பட 3 போ் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 321-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், 394 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 38,759-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் தற்போது 2,275 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 167 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,503-ஆக உயா்ந்தது.

இதனிடையே, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 187-ஆக அதிகரித்தது. இதுவரை 23,418 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 1,898 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.