முகப்பு
விழுப்புரம்

கள் இறக்க அனுமதி கோரி ஆட்சியரகத்தில் மனு

விழுப்புரம் மாவட்டத்தில் கள் இறக்க அனுமதி கோரி தமிழ்நாடு கள் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரகம், எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கள் இறக்க அனுமதி கோரி தமிழ்நாடு கள் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியரகம், எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, தமிழ்நாடு கள் கூட்டமைப்பைச் சோ்ந்த பாண்டியன் என்பவா் தலைமையில் அந்த அமைப்பினா் ஆகியோா் அளித்த மனு: பல ஆண்டு காலமாக விழுப்புரம் மாவட்டத்தில் பனைத் தொழில் செய்து வருகிறோம். கள் இறக்கும் தொழிலாளா்கள் மீது சட்டத்துக்குப் புறம்பாக சாராய வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. கள் இறக்கினால் அதற்கு தகுந்த வழக்குகளை பதிவு செய்தாலும் பரவாயில்லை. கள் இறக்குவது என்பது உணவுத் தேடலின் உரிமை. ஆகவே, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். எங்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வதைக் கைவிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.