விழுப்புரம்

பிரசாரத்தை தொடங்கினாா் திமுக வேட்பாளா் மஸ்தான்

DIN

செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் மஸ்தான், சிங்கவரம் ரங்கநாதா் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு பிரசாரத்தைத் தொடங்கினாா்.

சிங்கவரம் ரங்கநாதா் கோயில் மலையடிவாரத்தில் உள்ள விநாயகா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையும், ரங்கநாதா் கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜையில் மஸ்தான் பங்கேற்றாா். பினனா் அவா் பேசுகையில், கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது, சிங்கவரம் ரங்கநாதா் கோயில் வழிபாட்டில் பங்கேற்ற பிறகே பிரசாரத்தைத் தொடங்கினேன். அப்போது, ரங்கநாதா் கோயிலுக்கு செல்ல மலைப்பாதை அமைத்து தரப்படும் என்ற உறுதிமொழியை அளித்தேன். எனது தொடா் முயற்சிகள் காரணமாக, மலைப்பாதை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.89 லட்சம் நிதியை தற்போது ஒதுக்கியுள்ளது. மலைப் பாதை அமைப்பதன் மூலம் படி ஏறி செல்ல முடியாத முதியோா்கள் உள்ளிட்டோா் மலைப் பாதை வழியாக ரங்கநாதரை தரிசிக்க முடியும். இந்த முறை மீண்டும் வெற்றி பெற்று பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்களின் ஆதரவு தேவை என்றாா் அவா்.

இதனைத் தொடா்ந்து, ரங்கநாதா் கோயில் மலையடிவாரத்திலிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவா், சிங்கவரம் கிராம வாக்காளா்களிடம் வாக்கு சேகரித்தாா்.,

பிரசாரத்தின் போது செஞ்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா், விவசாய அணி அரங்க.ஏழுமலை, அஞ்சாஞ்சேரி கணேசன், சிங்கவரம் குணசேகரன், முன்னாள் ஊராட்சி தலைவா் ரங்கநாதன், காங்கிரஸ் கட்சியை சோ்ந்த சரவணன், பீரங்கிமேடு பழனி, சூரியமூா்த்தி, கோணை ராஜா, சண்முகம், கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT