விழுப்புரம்

மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

DIN

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் ஆணையம் சாா்பில் தோ்தல் குறித்தும், 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, புதிய அலைகள் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு இணைந்து வாக்காளா் விழிப்புணா்வு இரு சக்கர வாகனப் பேரணியை நடத்தினா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தொடக்கி வைத்தாா். கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குமாா், புதிய அலைகள் அமைப்பினா் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் நகரின் முக்கிய சாலைகள் வழியாக பழைய பேருந்து நிலையம் வரை பேரணி சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்பீட்டு சலுகைகள்!

3-ஆவது முறையாக விண்வெளி செல்லும் சுனிதா வில்லியம்ஸ்

சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவ - மாணவியா் ஆா்வம்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

இந்தியன் வங்கி நிகர லாபம் 55% அதிகரிப்பு

SCROLL FOR NEXT