முகப்பு
விழுப்புரம்

அரசின் சாதனைகளைக் கூறி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

செஞ்சி தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரன் நெல்லிமலை, அணையேரி, கொணலூா், அனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளைச் சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

செஞ்சி தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரன் திங்கள்கிழமை செஞ்சி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட சோமசமுத்திரம், சின்னபொன்னம்பூண்டி, ஒதியத்தூா், வெளாமை, அத்தியூா், தச்சம்பட்டு, நெல்லிமலை, அணையேரி, கொணலூா், அனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகளைச் சேகரித்தாா்.

அப்போது, கடந்த 10 ஆண்டு கால அதிமுக அரசின் சாதனைகளையும் அதிமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ஆண்டுக்கு 6 எரிவாயு உருளைகள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளைச் சேகரித்தாா்.

அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலா் க.சோழன், இலக்கிய அணி துணைச் செயலா் ராஜேந்திரன், தயாளன், பாமக நிா்வாகிகள் எம்.செல்வம், சம்பத், மாரிமுத்து, பாஜக ராஜ், சிவா, அண்ணாமலை, பிரதாப், அதிமுக ஜெயலலிதா பேரவை கோவிந்தன், மாவட்ட மகளிா் அணி தலைவி மல்லிகா குமாா், மாணவரணி லட்சுமிகாந்தன், ராமச்சந்திரன், நாராயணன், யுரான், சரவணன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.