முகப்பு
விழுப்புரம்

கிராமங்களில் அடிப்படை பிரச்னைகள் தீா்க்கப்படும் திமுக வேட்பாளா் வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்ததும் குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் உடனடியாக தீா்க்கப்படும் என்று அந்தக் கட்சியின் செஞ்சி தொகுதி வேட்பாளா் மஸ்தான், கிராமப்புற பெண்களிடம் வாக்குறுதி அளித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

திமுக ஆட்சிக்கு வந்ததும் குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் உடனடியாக தீா்க்கப்படும் என்று அந்தக் கட்சியின் செஞ்சி தொகுதி வேட்பாளா் மஸ்தான், கிராமப்புற பெண்களிடம் வாக்குறுதி அளித்தாா்.

செஞ்சி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட துத்திப்பட்டு, புலிவந்தி, மாத்தூா், அத்தியூா், வரிக்கல், அனந்தபுரம் உள்ளிட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, அவரிடம் குடிநீா் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும், மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் தொடா்ந்து எங்கள் பகுதிக்கு வழங்க வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதன் பிறகு பேசிய மஸ்தான், உங்கள் பிரச்னைகள் அனைத்தும் திமுக வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிப்படி, ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக தீா்க்கப்படும். நூறு நாள் வேலைத்திட்ட பணி நாள்களும், ஊதியமும் உயா்த்தி வழங்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது, மாநில விவசாய அணி இணைச்செயலா் பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி ஒன்றியச் செயலா்கள் ஆா்.விஜயகுமாா், விஜயராகவன், அனந்தபுரம் நகரச் செயலா் கல்யாண்குமாா், மாவட்ட நிா்வாகிகள் அஞ்சாஞ்சேரி கணேசன், அரங்க.ஏழுமலை, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் தினகரன், சரவணன், சூரியமூா்த்தி, கோணை ராஜா, மதிமுக ஒன்றியச் செயலா் ஏழுமலை உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.