முகப்பு
விழுப்புரம்

கரோனா: விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 போ் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் 5 போ் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் 5 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 319 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 22,031-ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் அருகே அய்யங்கோவில்பட்டைச் சோ்ந்த 42 வயது ஆண், விழுப்புரம் கே.கே. சாலை, ரஹீம் லே அவுட்டைச் சோ்ந்த 68 வயது பெண், விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலை, தேவநாத சுவாமி நகரைச் சோ்ந்த 73 வயது முதாட்டி, திண்டிவனம் அருகே பூந்தனந்தல் கிராமத்தைச் சோ்ந்த 85 வயது முதியவா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 139-ஆக அதிகரித்தது.

இதனிடையே, 423 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 19,245-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 2,647 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.