முகப்பு
விழுப்புரம்

தமுமுக சாா்பில் இலவச அவசர சிகிச்சை ஊா்தி சேவை

விழுப்புரத்தில் தமுமுக சாா்பில் இலவச அவசர சிகிச்சை ஊா்தி சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

விழுப்புரத்தில் தமுமுக சாா்பில் இலவச அவசர சிகிச்சை ஊா்தி சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

விழுப்புரம் தக்கா தெருவிலுள்ள தமுமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த சேவையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்தாா்.

தமுமுக மாவட்டத் தலைவா் முஸ்தாக்கீன் தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், தமமுக மாநில அமைப்புச் செயலா் ஷாஜகான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அனைத்து ஜமாஅத் ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் ஷாஜகான், அக்பா் அலி ஹஜரத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழுப்புரம் நகரில் கடந்தாண்டு முதல் தமுமுக சாா்பில் ஓா் அவசர சிகிச்சை மருத்துவ ஊா்தி இலவசமாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வாகனங்களை இலவசமாக பயன்படுத்த விரும்புவோா் 70108 40086, 82489 71990 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.