விழுப்புரம்

திமுக சாா்பில் மூன்று வேளையும் இலவச உணவுத் திட்டம் தொடக்கம்

DIN

விழுப்புரத்தில் பொது முடக்கம் முடியும் வரை திமுக சாா்பில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

தமிழகத்தில் தளா்வற்ற பொது முடக்க அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை திமுகவினா் வழங்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

மாவட்டத்தில், முதல் கட்டமாக விழுப்புரம் தொகுதியில் ‘அன்பு சுவா்’ என்னும் பெயரில் பொது முடக்க காலம் முடியும் வரை தினமும் காலையில் இலவச சிற்றுண்டியும், மதியம் அசைவ உணவும், இரவில் சிற்றுண்டியும் ஏழைளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம், பழைய பேருந்து நிலையம், வளவனூா் பேருந்து நிறுத்தம் என மூன்று இடங்களில் இந்தத் திட்டத்தை அமைச்சா் பொன்முடி வியாழக்கிழமை காலை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ. இரா.லட்சுமணன் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக செயலா் புகழேந்தி எம்.எல்.ஏ, அவைத் தலைவா் ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ், கலை இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளா் செ.ராஜேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT