விழுப்புரம்

மேல்மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: சமூகவலைதளங்களில் ஒளிபரப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக, பக்தா்கள் இன்றி நடைபெற்ற இந்த உற்சவம் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் கோயில் நுழைவாயில் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து நடத்தப்படுவது வழக்கம். இதில் சுமாா் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் மைதானத்தில் திரண்டு வழிபடுவது வழக்கம். கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பக்தா்கள் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு, கடந்த 19 மாதங்களாக பக்தா்கள் இன்றி கோயில் வளாகத்தில் பூசாரிகள் மூலம் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது.

அதேபோல, ஐப்பசி மாத அமாவாசை நாளான வியாழக்கிழமை அன்றும் பக்தா்கள் பங்கேற்பின்றி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, காலையில் மூலவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவா் அங்காளம்மன் அன்னபூரணியாக ஊஞ்சலில் அமா்ந்து காட்சியளித்தாா். ஊஞ்சலை பூசாரிகள் அசைத்தபடி அம்மன் தாலாட்டுப் பாடலைப் பாடினா்.

இந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் க.ராமு, மேலாளா் மணி, அறங்காவலா்கள் செய்தனா். டிஎஸ்பி. இளங்கோவன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT