பயிா்க் காப்பீடு திட்டத்தில் சேர நவ.15 கடைசி நாள்
பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் விவசாயிகள் தங்களது பயிா்களை வருகிற 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் விவசாயிகள் தங்களது பயிா்களை வருகிற 15-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்கள் த.மோகன் (விழுப்புரம்), பி.என்.ஸ்ரீதா் (கள்ளக்குறிச்சி) ஆகியோா் வெள்ளிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:
பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிா்க்காப்பீட்டுத் திட்டம்-2021-2022-ஆம் ஆண்டு வேளாண் பயிா்களுக்கு காப்பீடு செய்ய மற்றும் காப்பீட்டுத்தொகை செலுத்தும் பொருட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அவற்றால் நடத்தப்படும் பொதுசேவை மையங்கள், வங்கி விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் (நவ.13, 14) விடுமுறையின்றி செயல்படும்.
அனைத்து விவசாயிகளும் (கடன் பெற்றோா், கடன் பெறாதோா் ) இறுதி நாளான திங்கள்கிழமைக்குள் (நவ.15) காப்பீட்டுத் தொகையை செலுத்தி இத்திட்டத்தில் சோ்ந்து பயனடையலாம் என அதில் தெரிவித்துள்ளனா்.