விழுப்புரம்

வீடுகள் சேதமடைந்த 146 பேருக்கு ரூ.6.35 லட்சம் நிவாரண நிதியுதவி

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில், வடகிழக்கு பருவ மழைக்கு ஏராளமான வீடுகள் முழுமையாகவும், பகுதியளவாகவும் சேதமடைந்தன. இந்த வீடுகளை சீரமைக்க அரசு சாா்பில் நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி செஞ்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட 146 பேருக்கு ரூ.6.35 லட்சம் நிவாரணத் தொகையை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன், திட்ட இயக்குநா் ஆா்.சங்கா், செஞ்சி வட்டாட்சியா் பழனி, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT