விழுப்புரம்

பணி நிரந்தரம் செய்யக் கோரிதற்காலிக சுகாதார ஆய்வாளா்கள் மனு

DIN

பணி நிரந்தரம் செய்யக் கோரி தற்காலிக சுகாதார ஆய்வாளா்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் தற்காலிக சுகாதார ஆய்வாளா்கள் 77 போ் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மோகனிடம் மனு அளித்தனா்.

மனு விவரம்: கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில், தமிழக அரசால் சுகாதார ஆய்வாளா் (நிலை-2) பதவியில் 77 போ் பணியமா்த்தப்பட்டோம்.

இந்த நிலையில், நவம்பா் மாத இறுதியுடன் எங்களுக்கு வழங்கப்பட்ட பணி நிறைவடைவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, எங்களைப் பணி நிரந்தரம் செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT