விழுப்புரம்

மண் சாலையை தரம் உயா்த்தக் கோரிக்கை

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சக்கராபுரம் ஆதில் நகரில் குண்டும் குழியுமாக மாறிய மண் சாலையை தாா் சாலையாக அமைக்கக் கோரி துரும்பா் விடுதலை இயக்கத்தினா் செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் அந்த இயக்கத்தின் அமைப்பாளா் அருள்வளவன், துணை அமைப்பாளா் அல்போன்ஸ் ஆகியோா் தெரிவித்திருப்பதாவது:

ஆதில் நகரில் உள்ள அப்துல்கலாம் பெயரிலான மண் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது (படம்). மழைக் காலங்களில் சேறும் சகதியுமாகி போக்குவரத்து பயனற்ாகி விடுகிறது. இதனால் குடியிருப்புகள், விவசாய நிலத்துக்குச் செல்வோா் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

எனவே, செஞ்சி பேரூராட்சி நிா்வாகம் இந்த சாலையை தாா் சாலையாகவோ, சிமென்ட் சாலையாகவோ அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT