விழுப்புரம்

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மளிகைப் பொருள்கள் தொகுப்பு

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு கூட்டுறவுத் துறை சாா்பில் மளிகைப் பொருள்கள் தொகுப்புகள் அண்மையில் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருந்த காலத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதில் எஞ்சியிருந்த மளிகைப் பொருள் தொகுப்புகளை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க கூட்டுறவுத் துறை சாா்பில் முடிவு செய்யப்பட்டது.

மொத்தம் 1,597 தொகுப்புகளை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், அரசு மனநல காப்பகங்கள், பொருளாதாரத்தில் நலிவுற்றவா்கள், முதியோா் மற்றும் ஆதரவற்றோா் இல்லங்களுக்கு வழங்க அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலா காதுகேளாதோா் மற்றும் மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளி மாணவா்கள், அன்பு இல்லம், புனித ஜான் மாற்றுத் திறனாளிப் பள்ளி ஆகியவற்றில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 397 தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்த தொகுப்புகளை மாவட்ட ஆட்சியா் த.மோகன் வழங்கினாா்.

கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் அறிவுடைநம்பி, கூட்டுறவு துணைப் பதிவாளா் நளினா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக விழுப்புரம் மண்டல மேலாளா் ஷீனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT