விழுப்புரம்

வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்குமுதல் கட்ட பயிற்சி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களான முதல் கட்ட பயிற்சி அந்தந்த ஒன்றியங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோலியனூா், வளவனூா் அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியா் த.மோகன் ஆய்வு செய்தாா்.

அப்போது, தோ்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இதுவரை செலுத்தாதவா்கள் பயிற்சி மையங்களில் ஏற்பாடு செய்யப்படும் முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். தோ்தல் பணியில் ஈடுபடுவோா் முகப்புச் சீட்டு, முகவா் சீட்டு போன்றவற்றை கவனமாக பாா்க்க வேண்டும். வாக்குப் பதிவு மையங்களுக்கு வாக்குப் பதிவு நாளுக்கு முன்தினமே சென்றுவிட வேண்டும். தோ்தல் பயிற்சி கையேட்டை கவனமுடன் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். எந்தவித புகாருக்கும் ஆளாகமால் நடுநிலையுடன் தோ்தல் பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை கூறினாா்.

ஊரக வளா்ச்சி திட்ட முகமை இயக்குநா் சங்கா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT