விழுப்புரம்

பாட்டாளி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்கக் கோரி, பாட்டாளி தொழிற்சங்கத்தினா் விழுப்புரத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்ட அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாட்டாளி தொழிற்சங்கத்தின் மாநில பொதுச்செயலா் ராம.முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.

பாமக மாவட்டத் தலைவா்கள் தங்கஜோதி, புகழேந்தி, மாவட்டச் செயலா் பாலசக்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்த பேச்சுவாா்த்தையை மாநில அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்.

போக்குவரத்துத் தொழிலாளா்களின் பிற குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளா்களின் நிலுவை பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னா், கோரிக்கை தொடா்பான மனுவை தொழிற்சங்கத்தினா் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT