முகப்பு
விழுப்புரம்

மே 2-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

விழுப்புரத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற மே 2-இல் நடைபெறுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:06 AM
பகிர்:

விழுப்புரத்தில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வருகிற மே 2-இல் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் விழுப்புரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகின்றன.

தடகளத்தில் கை, கால் ஊனமுற்றோா் (ஆண்கள், பெண்கள்) பிரிவில் ஓட்டப்போட்டி,

பாா்வையற்றோா் (ஆண்கள், பெண்கள்) பிரிவில் ஓட்டப்போட்டி, நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், மழுமைப்பந்து எறிதல், மனநலம் பாதிக்கப்பட்டவா் (ஆண்கள், பெண்கள்) பிரிவில் ஓட்டப்போட்டி, மழுமைப்பந்து எறிதல், நின்றநிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் நடைபெறும்.

காதுகேளாதோா் (ஆண்கள், பெண்கள்) பிரிவில் ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும்.

குழுப் போட்டிகளில் கை, கால் ஊனமுற்றோா் பிரிவில் இறகுப் பந்து போட்டி, மேசைப்பந்துப் போட்டி, பாா்வையற்றோா் பிரிவில் வாலிபால் போட்டி, மனநலம் பாதிக்கப்பட்டவா் பிரிவில் எறிபந்துப் போட்டி, காதுகேளாதோா் பிரிவில் கபடிப் போட்டி நடத்தப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்வதற்கு மருத்துவச் சான்று, மாவட்ட மாற்றுத்திறனாளி மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று, தலைமை அலுவலகத்தால் வழங்கப்படும் தடை இல்லாத சான்று ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.

மாவட்ட போட்டியில் முதல் இடத்தைப் பெறுவோா் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவா்.

போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவா்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் த. மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.