நகராட்சி ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
தமிழகத்தில் நகராட்சிகளில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று நகராட்சி ஓட்டுநா்கள், துலக்குநா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
தமிழகத்தில் நகராட்சிகளில் காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று நகராட்சி ஓட்டுநா்கள், துலக்குநா்கள் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
இந்தச் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் தோ்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், மாநிலத் தலைவராக முருகன், பொருளாளராக பிரகாஷ், பொதுச் செயலராக மணிண்டன், ஒருங்கிணைப்பாளராக பஷீா் அகமது ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
ஓட்டுநா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும், காலியாக உள்ள ஓட்டுநா் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.